வாக்னர் கூலிப்படைத் தலைவருக்கு புடின் அளித்த ஆஃபர்: வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்
வாக்னர் கூலிப்படைத் தலைவருக்கு புடின் ஒரு ஆஃபரை முன்வைத்ததாகவும் அதை அவர் நிராகரித்துவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கூலிப்படைத் தலைவருக்கு புடின் அளித்த ஆஃபர்
வாக்னர் கூலிப்படைத் தலைவரான Yevgeniy Prigozhinஉடைய படையினரை ரஷ்ய ராணுவத்தில் இணைய புடின் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் புடினே தெரிவித்துள்ளார். ராணுவ தளபதிகள் பலர் தனது திட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள புடின், ஆனாலும், Prigozhin தனது திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக புடின் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவை ஏற்றுக்கொள்ள தனது வீரர்கள் மறுத்துவிட்டதாக Prigozhin தெரிவித்ததாக புடின் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைகள் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடந்ததாகக் கூறப்படும் ஜூன் 23, 24க்கு சில நாட்களுக்குப் பின் நடந்ததாக கூறப்படுகிறது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |