மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: ஜப்பான் மக்களை பீதியில் தள்ளிய எச்சரிக்கை!
மிகப்பெரிய நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை ஜப்பான் விடுத்துள்ளது.
ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை
எதிர்காலத்தில் தாக்கக்கூடிய மிகப்பெரிய நிலநடுக்க அபாயம் குறித்து ஜப்பானில் முதல் முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு இந்த எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.
அதில், மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும் படியும், ஆனால் யாரும் தற்போது வெளியேற தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிகப்பெரிய நிலநடுக்கம் உடனடியாக ஏற்படும் என்பதற்கான எச்சரிக்கை இது அல்ல அறிவிப்பில் அழுத்தமாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதன் நிகழ்தகவானது(probability) வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7.1 ரிக்டர் நிலநடுக்கம்
ஜப்பானின் தெற்கு பகுதி தீவான Kyushu-வில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் என்ற அளவிலான நிலநடுக்கத்திற்கு சிறிது நேரத்திற்கு பிறகு இந்த எச்சரிக்கையானது வெளியாகியுள்ளது.
?What's the Nankai Trough earthquake?
— Gearoid Reidy リーディー・ガロウド (@GearoidReidy) August 8, 2024
Japan is warning that the risk of the long-feared Nankai Trough earthquake is "higher than normal" following today's quake off Kyushu.
The country estimates such a quake could kill as many as 320,000 people. pic.twitter.com/i2iKMIhdVZ
நிபுணர்கள் இந்த எச்சரிக்கையை தீவிரமாக பார்கின்றனர், ஏனென்றால் பசிபிக் கடற்கரையின் நில அதிர்வு நடவடிக்கையின் பகுதியான Nankai Trough-வின் விளிம்பில் நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |