ட்ரம்ப் மனைவியையும் ஜஸ்டின் ட்ரூடோவையும் இணைத்து பரவத் துவங்கியுள்ள வதந்திகள்
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் மனைவி மெலானியாவையும், கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவையும் இணைத்து வெளியான வதந்திகள் மீண்டும் இணையத்தில் பரவத்துவங்கியுள்ளன.
பரவத் துவங்கியுள்ள வதந்திகள்
சிலருக்கு பிரபலங்களைக் குறித்து வதந்தி பரப்புவதே வேலை. அவ்வகையில், இளவரசர் ஹரி மன்னர் சார்லசுக்கு பிறந்தவர் இல்லை என்னும் ஒரு வதந்தி குறித்த செய்திகள் இன்னமும் அவ்வப்போது ஊடகங்களில் தலைகாட்டுவதுண்டு.
அதேபோல, அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் மனைவி மெலானியாவையும், கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவையும் இணைத்து ஒரு வதந்தி பரவியது.
மெலானியா ட்ரூடோவுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் பாருங்கள். ட்ரூடோவையும் மெலானியாவின் மகன் பேரன் ட்ரம்பையும் (Barron Trump) பாருங்கள். பேரன் உண்மையாகவே ட்ரம்புடைய மகன்தானா என கேட்கும் ஒரு செய்தி சமூக ஊடகமான எக்ஸில் வெளியானது.
Take a look at these photos of Melania Trump getting personal with Canadian Prime Minister Justin Trudeau, Trudeau close up and Barron Trump. Now try to convince me that Barron is actually Donald's kid. pic.twitter.com/l4quKi88rw
— Ray Loewe (@rloewe65) January 20, 2024
அந்த வதந்தி தொடர்பான புகைப்படங்கள் தற்போது மீண்டும் இணையத்தில் பரவத்துவங்கியுள்ளன.
அது குறித்து பேசிய பிரபல தகவல் தொடர்பு நிபுணரான Amy Prenner என்பவர், பிரபலங்களைக் குறித்து இப்படியெல்லாம் வதந்திகள் பரவுவது சகஜம்தான். அவற்றை கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |