இரவோடு இரவாக தாக்கிய 200க்கும் மேற்பட்ட உக்ரைனிய டிரோன்கள்: வேட்டையாடிய ரஷ்யா
இரவோடு இரவாக ரஷ்யா 200க்கும் மேற்பட்ட டிரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய டிரோன்கள்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் கடந்த சில நாட்களில் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் இரவோடு இரவாக நடத்திய மிகப்பெரிய டிரோன் தாக்குதல் நடத்தி இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், ரஷ்யா மீது தாக்குதல் நடத்திய 221 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல் ரஷ்யாவில் பல நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகத்தின் படி, பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் 92 டிரோன்களும், ஸ்மோலென்ஸ்க் பிராந்தியத்தில் 42 டிரோன்களும் அதிகபட்சமாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலும் 9 உக்ரைனிய டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |