புதிய சவால்களுக்கான பதில்! சீனா-ரஷ்யா இணைந்து பிரம்மாண்ட கூட்டு ராணுவ பயிற்சி
ரஷ்யாவின் கடற்படை மற்றும் விமானப்படைகள் சீனாவுடன் இராணுவ பயிற்சியில் கலந்து கொள்ள இருப்பதாக சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சீனாவுடன் ரஷ்யா கூட்டு ராணுவ பயிற்சி
சீனாவின் 2023ம் ஆண்டுக்கான வடக்கு கூட்டு இராணுவ பயிற்சியில் ரஷ்யாவின் கடற்படை மற்றும் விமானப்படைகள் கலந்து கொள்ள இருப்பதாக சனிக்கிழமை சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து இருப்பதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த ராணுவ கூட்டுப் பயிற்சியானது ஜப்பான் கடலில் நடைபெறும் என்றும், இதில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவும் கலந்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPA/WANGLINAN
ஆனால் போர் பயிற்சி எப்போது தொடங்கும் எத்தனை நாள் நடைபெறும் என்பது போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
ராணுவ பயிற்சியின் நோக்கம்
ரஷ்யா மற்றும் சீனாவின் இந்த கூட்டு ராணுவ பயிற்சியானது, இரண்டு இராணுவத்தின் கூட்டு ஒத்துழைப்பு திறனை அதிகப்படுத்தவும், பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை இணைந்து பாதுகாப்பதற்கும், உருவாகும் புதிய சவால்களை இணைந்து பதிலளிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Xinhua Photo
ரஷ்யா-உக்ரைன் இடையிலான மோசமான போர் சூழ்நிலையில் மேற்கத்திய நாடுகள் கூட்டாக இணைந்து ரஷ்யாவை எதிர்த்து வரும் நிலையில், சீனா தொடர்ந்து ரஷ்யாவுக்கு மறைமுகமான ஆதரவை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |