உணவு தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் கைவிடப்படும்: ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை
உணவு தானிய ஒப்பந்தத்தை கைவிடுவது தொடர்பாக ரஷ்யா தற்போது சிந்தித்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
உணவு தானிய ஒப்பந்தம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடங்கிய பிறகு உக்ரைனில் இருந்து ஏழ்மையான உலக நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்த உணவு தானியங்கள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனால் உலக அளவில் உணவு தானியங்களின் விலை கடுமையாக உயர்ந்தது, அத்துடன் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பல்வேறு நாடுகளில் கடுமையான உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து உக்ரைனில் விளையும் கோதுமை போன்ற தானியங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில், உக்ரைன், ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இணைந்து கருங்கடல் வழியாக உக்ரைனிய தானியங்களை ஏழ்மை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் இதுவரை கிட்டத்தட்ட 25 மில்லியன் டன் உணவு தானியங்கள் வளர்ச்சி அடையாத நாடுகளுக்கு உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் ஏற்பட்ட இந்த ஒப்பந்தம் பலமுறை நிறைவடைந்தாலும், அவை பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வந்தது.
shutterstock/Mokshin AleksandrPutin said that Russia is now thinking about withdrawing from the grain deal, since the conditions of the Russian Federation for its extension are not being met. pic.twitter.com/V5hAGrbCB7
— NEXTA (@nexta_tv) June 13, 2023
கைவிடப்படும் ஒப்பந்தம்
உலக நாடுகளுக்கான உக்ரைன் உணவு தானிய ஏற்றுமதி செய்யும் இந்த ஒப்பந்தம் விரைவில் காலாவதி ஆக இருக்கும் நிலையில், உணவு தானிய ஒப்பந்தத்தை கைவிடுவது தொடர்பாக ரஷ்யா தற்போது சிந்தித்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
உணவு தானிய ஒப்பந்த நீட்டிப்புக்கான ரஷ்யாவின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.