வாக்னர் குழுவின் எரிபொருள் கிடங்குகளில் குண்டுவீசி ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர்கள் தாக்குதல்!
வாக்னர் குழுவின் எரிபொருள் கிடங்குகளை குண்டுவீசி ரஷ்ய இராணுவ ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக திரும்பிய வாக்னர் அமைப்பு
கடந்த ஒரு வருடம் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யாவுடன் சேர்ந்து 'வாக்னர்' என்ற மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு மிகப் பெரிய ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தக்கூடியது.
சமீபகாலமாக உக்ரைன் வாக்னர் அமைப்பின் மீது தொடர்ந்து அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை என்று அந்த அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ் அறிவித்திருந்தார்.
ஆனால், அதையெல்லாம் ரஷ்யா கண்டுக்காததால் கோபமடைந்த வாக்னர் அமைப்பு தற்போது ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி இருக்கிறது.
ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர்கள் தாக்குதல்
இதனால் கோபமடைந்த ரஷ்ய அதிபர் பேசுகையில், ரஷ்ய நாட்டிற்கு எதிராக யாராவது ஆயுதம் ஏந்தினாலும், கிளர்ச்சியில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது ரஷ்யா கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர்கள் Voronezh பகுதியில் உள்ள Wagner குழுவின் எரிபொருள் கிடங்குகளை குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் அப்பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
Russian military helicopters are bombing fuel depots held by the Wagner Group in the Voronezh region. #WagnerCoup #WagnerGroup #Russia #Putin pic.twitter.com/g0FF5lHFLN
— Paul Golding (@GoldingBF) June 24, 2023
People flee from explosion in Rostov, Russia. pic.twitter.com/mAk0hhiilR
— The Spectator Index (@spectatorindex) June 24, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |