புடின் படைகளுக்குள் வெடித்த மோதல்: ரஷ்ய ராணுவ தளபதியை சிறைப்பிடித்த வாக்னர் கூலிப்படை
ரஷ்ய ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னலை ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் படை சிறைப்பிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது.
வாக்னர் கூலிப்படை
உக்ரைன் ரஷ்யா இடையிலான 16 மாத கால போர் நடவடிக்கையில், ரஷ்ய ராணுவத்துடன் சேர்ந்து கூலிப்படையான வாக்னர் படையும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றுவதற்கு வாக்னர் படை குழுவின் கருணையற்ற தாக்குதல் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அப்படி இருக்கையில் உக்ரைனில் சண்டையிட்டு வரும் ரஷ்யாவின் நேரடி ராணுவத்திற்கும், கூலிப்படையான வாக்னர் படை குழுவுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.
#Wagner mercenaries claim to have captured a lieutenant colonel of the #Russian army, who ordered them to shell their positions.
— NEXTA (@nexta_tv) June 5, 2023
Earlier, #Prigozhin said that the military personnel of the Russian Defense Ministry had mined the exit routes of the Wagner PMC from #Bakhmut. pic.twitter.com/XGtzknTuCQ
அந்த வகையில் சமீபத்தில் பக்முத்-தில் இருந்து வாக்னர் படைகுழு வெளியேறும் வழியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்ததாக வாக்னர் படை குழுவின் தலைவர் பிரிகோஜின்(Prigozhin) குற்றம்சாட்டி இருந்தார்.
ரஷ்ய ராணுவ கர்னல் சிறைபிடிப்பு
இந்நிலையில் பக்முத் இருந்து வெளியேறும் போது வாக்னர் PMC படை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ரஷ்ய ராணுவத்தின் 72வது படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் கர்னல் வினிவிடின்-ஐ(Vinivitin) வாகனர் படைகுழு சிறைபிடித்துள்ளது.
பின் சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய ராணுவ அதிகாரியிடம் வாக்னர் குழு வீரர்கள் கேள்வி எழுப்புவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
#Prigozhin's #Wagnerites disarmed & captured the #RussianArmy commander of the 72nd brigade, #LieutenantColonel Vinivitin.
— Erik Korsas (@KorsasErik) June 4, 2023
They accused him of having given the order to open fire on #WagnerPMC during the withdrawal from #Bakhmut.
The civil war has now started in #Russia! pic.twitter.com/773Nk6FMDX
அதில் வாக்னர் படை குழு மீது எதற்காக தாக்குதல் நடத்த உத்தரவிட்டீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த லெப்டினன்ட் கர்னல் வினிவிடின் மதுபோதையில் அவ்வாறு உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய அணியில் 10 முதல் 12 வீரர்கள் இருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி புடின் களமிறக்கிய படைகளின் இடையே தற்போது மோதல் வெடித்து இருப்பது ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.