வேகமாக முன்னேறும் உக்ரைனிய படை: சாலையில் வரிசையாக கிடக்கும் ரஷ்ய வீரர்களின் உடல்கள்
உக்ரைனிய படைகளால் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட ஸ்டோரோஜெவ் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் உடல் மற்றும் எரிக்கப்பட்ட ராணுவ வாகனங்கள் வரிசைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
முன்னேறும் உக்ரைன்
மேற்கத்திய நாடுகளின் அதிகப்படியான ஆயுத உதவியை தொடர்ந்து, உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யாவிற்கு எதிரான பதிலடி தாக்குதலை அறிவித்தார்.
இதையடுத்து கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனிய பகுதியில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிராமங்களை உக்ரைனிய ஆயுதப்படை பதிலடி தாக்குதல் நடத்தி மீட்க தொடங்கியுள்ளது.
Reuters
அந்தவகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரஷ்ய படைகளால் கைபற்றப்பட்ட ஸ்டோரோஜெவ்(Storozheve) கிராமத்தை சமீபத்தில் உக்ரைனிய படைகள் எதிர்ப்பு தாக்குதல் நடத்தி மீட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்கள்
இந்த எதிர்ப்பு தாக்குதலில் 50 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும், 4 பேரை பிணைக் கைதியாக பிடித்து வைத்து இருப்பதாக உக்ரைனிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reuters
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட ஸ்டோரோஜெவ் நகரை பார்வையிட ராய்ட்டர்ஸ் செய்தியாளர் சென்று இருந்த போது, ஸ்டோரோஜெவ் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் உடல் மற்றும் சிதைந்த ராணுவ வாகனங்கள் வரிசைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் சில ரஷ்ய ராணுவ வீரர்களின் உடல்கள் சிதைந்த வாகனத்தின் கீழ் புழுதியடைந்த சாலையிலும், அதற்கு அருகில் உள்ள புல்வெளிகளிலும் கிடப்பதை புதன்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கண்டுள்ளனர்.
Reuters
கடந்த சில நாட்களாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் நடந்து வரும் எதிர்ப்பு தாக்குதலின் ஒருப்பகுதியாக ஸ்டோரோஷேவ் நகரில் ஏற்பட்டுள்ள அழிவுகள் போரின் மூர்கத்தன்மையை காட்டுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.