பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி: ரஷ்ய கல்வி அமைச்சகம் அறிக்கை
ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு ஏகே-74 மற்றும் கையெறி குண்டுகளை பயன்படுத்துவது உள்ளிட்ட அடிப்படை ராணுவ பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சி
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு அடிப்படை இராணுவப் பயிற்சி வழங்குவது தொடர்பான திட்டத்தை ரஷ்ய கல்வி அமைச்சகம் வடிவமைத்துள்ளது.
இதனடிப்படையில் மாணவர்களுக்கு தானியங்கி துப்பாக்கியை எப்படி சுடுவது, கையெறி குண்டுகளை வெடிக்கச் செய்வது எப்படி? என்பது போன்ற ராணுவ பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
Getty Images
மேலும் இந்த பயிற்சியில் AK-74 மற்றும் RPK-74 தாக்குதல் துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள், மகரோவ் பிஸ்டல் மற்றும் கைக்குண்டுகளை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் எவ்வாறு பிரித்தெடுப்பது மற்றும் அசெம்பிள் செய்வது என்று மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர்களுக்கான இந்த பயிற்சி பாடத்தில், அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் குறித்து விரிவுரைகளும் அடங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (MISiS), மாஸ்கோ பவர் இன்ஜினியரிங் நிறுவனம் (MPEI), மாஸ்கோ பொறியியல் இயற்பியல் நிறுவனம் (MEPhI) மற்றும் மாஸ்கோ இயற்பியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (MIPT) ஆகியவற்றில் இந்த பாடநெறி தொடர்பான கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
EFE/REX/Shutterstock
பள்ளி குழந்தைகளுக்கும் பயிற்சி
பல்கலைக்கழகங்களுக்கு முன்னதாக பள்ளி குழந்தைகளுக்கு கலாஷ்னிக்கோவ் தாக்குதல் துப்பாக்கியை உருவாக்குவது, ஒருங்கிணைந்த ஆயுதப் போரின் விதிகள், அகழிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் உபகரணங்களை மறைத்தல் ஆகியவற்றை கற்பிக்கும் திட்டத்தை ரஷ்ய கல்வி அமைச்சகம் தயாரித்து இருந்தது.
மேலும் இந்த பாடத்திட்டத்தில் மாணவர்கள், தங்கள் தாய்நாட்டின் தேசபக்தர்கள் நிலையிலிருந்து சர்வதேச இராணுவ-அரசியல் மற்றும் உள்நாட்டு நிகழ்வுகள் மற்றும் உண்மைகளை மதிப்பீடு செய்ய கற்றுக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்து.
Getty Images