பாதுகாப்பு என்பது வெறும் பித்தலாட்டம்: மாயமான நீர்மூழ்கிக் கப்பல் தலைமை நிர்வாகியின் வார்த்தைகள்
கனடா கடற்பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை பார்வையிடும் பொருட்டு பயணமான நீர்மூழ்கிக் கப்பல் மாயாமாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சில மணி நேரத்திற்கான ஆக்ஸிஜன்
தொடர்புடைய கப்பலை மீட்கும் பொருட்டு சர்வதேச நிபுணர்கள் குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இன்னும் சில மணி நேரத்திற்கான ஆக்ஸிஜன் மட்டுமே அந்த கப்பலில் எஞ்சியுள்ளது.
Image: CBS
இந்த நிலையில், அந்த நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனதற்கு வழிவகுத்த பல முக்கியமான பிழைகள் தொடர்பில் பல தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தவண்னம் உள்ளது.
அத்துடன் OceanGate நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Stockton Rush முன்னர் கூறியிருந்த கருத்தும் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாயமான நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்துள்ள ஐந்து பயணிகளில் இவரும் ஒருவர்.
2022 நவம்பரில் இவர் அளித்த நேர்காணல் ஒன்றில், பாதுகாப்பு என்பது வெறும் பித்தலாட்டம் எனவும், பாதுகாப்பு தான் முக்கியம் என்றால், நீங்கள் படுக்கையில் இருந்து வெளியே வரவே முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
@PA
நீர்மூழ்கிக் கப்பல் தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்ட தகவல் கிடைத்திருந்தும், 8 மணி நேரம் தாமதமாகவே உரிய அதிகாரிகளுக்கு OceanGate நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணம் புறப்பட்ட 1.45 மணி நேரத்தில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மரணம் கூட ஏற்படலாம்
ஆனால் 8 மணி நேரத்திற்கு பின்னர் தான் அமெரிக்க கடலோர காவல் படைக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளனர். மாயமான நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடித்து, அதில் இருக்கும் பயணிகளை மீட்பதே தங்களின் தற்போதைய முழு கவனமும் உள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான தமது கேள்விகளுக்கு பதிலளிக்காமல், தம்மை வேலையில் இருந்து நீக்கியதாக முன்னாள் ஊழியர் David Lochridge குற்றஞ்சாட்டியுள்ளார்.
Image: Woods Hole Oceanographic Institu
மாயமாகியுள்ள நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்துள்ள ஐவரும் தலா 200,000 பவுண்டுகள் கட்டணம் செலுத்தியுள்ளனர். அத்துடன், அந்த நீர்மூழ்கிக் கப்பலானது ஒரு சோதனைக் கப்பல் என்பதை ஒப்புக் கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் வைத்துள்ளனர்.
அந்த ஒப்பந்தத்தில், பயணத்தின் விளைவாக உடல் காயம், ஊனம், அதிர்ச்சி அல்லது மரணம் கூட ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |