பிரிந்து செல்ல முடிவு செய்த இளம் மனைவி: கோபத்தில் 63 வயது கணவர் செய்த செயல்
கிறிஸ்துமஸ் ஈவ் தினத்தன்று எர்னஸ்டோ ஃபவாரா என்ற 63 வயது மீனவர், அவருடைய 29 வயது மனைவி மரியா அமதுசோ தன்னை விட்டு செல்வதை தாங்க முடியாமல் கத்தியால் குத்தி கொலை செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் மனைவி கொலை
சிசிலியின் காஸ்டெல்வெட்ரானோவில்(Castelvetrano) வாழ்ந்து வரும் எர்னஸ்டோ ஃபவாரா என்ற 63 வயது கணவர் அவருடைய 29 வயது மனைவி மரியா அமதுசோ தன்னை விட்டு பிரிந்து செல்ல முயன்றபோது கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
கிறிஸ்துமஸ் ஈவ் தினத்தன்று நடைபெற்ற இந்த பயங்கர சம்பவத்தின் போது, எர்னஸ்டோ ஃபவாரா ரத்த வெள்ளத்தில், கையில் கொலை ஆயுதத்துடன் நின்றதாக இத்தாலிய ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Ernesto Favara & wife Maria Amatuzzo(Newsflash)
கொலைக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், மனைவி மரியா சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேற சில உடமைகளை எடுத்துச் சென்றதால் அவரை ஃபவாரா கொலை செய்து இருப்பதாக ஆரம்ப கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சம்பவத்தின் போது மரியா தன்னை தாக்கியவரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், ஆனால் ஃபவாரா சமையலறைக் கத்தியால் அவளை 12 முறை தாக்கியதாகவும், இதனால் வயிற்றில் பலமுறை கத்தியால் குத்தப்பட்ட மரியா அமதுசோவை காப்பாற்ற முடியவில்லை என்று ஆரம்ப கட்ட அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
(Newsflash)
5 வருட பயணம்
மீனவர் மற்றும் குப்பை வியாபாரியாக பணிபுரிந்து வரும் ஃபவாரா(63), தன்னுடைய 29 வயது இளம் மனைவியுடன் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், இவர்களுக்கு நான்கு வயதுடைய இரட்டை மகள்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த குழந்தைகள் காப்பகத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக வாழ்ந்து வருவதாக இத்தாலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் ஃபவாரா-க்கு முந்தைய திருமணத்திலிருந்து இரண்டு குழந்தைகளும், மரியாவுக்கு முந்தைய திருமணத்திலிருந்து இரண்டு குழந்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது 29 வயது மனைவியை கொலை செய்த 63 வயது கணவர் ஃபவாரா காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
(Newsflash)