சவுரி முடியோடு எப்படி? பியூட்டி பார்லர்களை மூடப்படுவதை நியாயப்படுத்தும் தாலிபான்
நாட்டில் அழகு நிலையங்களை மூடுவதற்கு தாலிபான்கள் விசித்திரமான நியாயத்தை முன்வைக்கின்றனர்.
இருக்கு., நியாயமான காரணங்கள் இருக்கு!
ஆப்கானிஸ்தானில் ஒரு மாதத்திற்குள் அழகு நிலையங்களை மூட வேண்டும் என தாலிபான் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு நியாமான காரணங்கள் இருப்பதாக தாலிபான் தெரிவித்துள்ளது.
பியூட்டி பார்லர்கள் இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்றும் திருமணத்தின் போது மணமகன் குடும்பத்திற்கு ஏற்படும் பெரும் நிதிச்சுமையை குறைக்கும் வகையிலும், அழகு நிலையங்களுக்கு தடை விதித்துள்ளதாக தாலிபான்கள் கூறியுள்ளனர்.
AP
சவுரி முடியோடு எப்படி?
இந்த விஷயங்களை தலிபான் செய்தி தொடர்பாளர் சாதிக் அகிப் மஹ்ஜர் வீடியோ மூலம் தெரிவித்தார். அந்த வீடியோவில், புருவங்களை வடிவமைத்தல், ஒரு பெண்ணின் இயற்கையான முடியை அதிகரிக்க மற்றவர்களின் தலைமுடியைப் பயன்படுத்துதல் மற்றும் மேக்கப்பைப் பயன்படுத்துதல் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சவுரி முடியை அணிந்து கொண்டு பிரார்த்தனை செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
Credit: AFP via Getty Images
மணமகன் குடும்பத்திற்கு நிதிச்சுமை
மணமகன் குடும்பம் திருமணத்திற்கு முன்பு மணமகள் மற்றும் அவரது உறவினர்களுக்கு அழகு நிலையத்தின் சேவைகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இதனால் அவர்களுக்கு கடும் நிதிச்சுமை ஏற்படுகிறது. சலூன்கள் மணமகன்களின் குடும்பங்களுக்கு பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
Beauty Parlour, Saloon, Bridal Makeup, Afghanistan, Women, Taliban
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |