தமிழ்நாட்டில் ரூ.7000 கோடி முதலீடு செய்யவுள்ள ஐரோப்பிய நிறுவனங்கள் - 15,000 வேலைவாய்ப்புகள் உறுதி
தமிழ்நாட்டில் ஐரோப்பிய நிறுவனங்கள் ரூ.7000 கோடி அளவில் முதலீடு செய்யவுள்ளன.
ஜேர்மனியில் நடைபெற்ற 'TN Rising Europe' முதலீட்டு மாநாட்டில், தமிழ்நாடு அரசு 26 ஐரோப்பிய நிறுவங்களுடன் ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திட்டது.
இதன்மூலம், 796 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளன.
மேலும், இதன்மூலம் 15,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய முதலீடுகள்
- Vensys Energy AG எனும் ஜேர்மன் நிறுவனம் ரூ.1068 கோடி முதலீடு செய்யவுள்ளது. இந்நிறுவனம் Gearless Driving தொழில்நுட்பம் கொண்ட காற்றாலை உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யவுள்ளது.
- BASF Environmental Catalyst and Metal Solutions (ECMS) நிறுவனம் ரூ.300 கோடிக்கு செங்கல்பட்டில் உள்ள தொழிற்சாலையை விரிவுபடுத்தவுள்ளது.
- Bella Premier Happy Engine நிறுவனம் திண்டுக்கல்லில் சானிட்டரி மாற்றம் மருத்துவ உற்பத்தி விரிவாக்கத்திற்காக ரூ.300 கோடி முதலீடு செய்கிறது.
- Herrenknecht India நிறுவனம் சுரங்க துளை இயந்திரங்கள் உற்பத்தி மற்றும் சென்னை மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதரவளிக்கவுள்ளது. இந்நிறுவனம் ரூ.250 கோடி முதலீடு செய்கிறது.
- Knorr-Bremse நிறுவனம் தமிழ்நாட்டில் பாதுகாப்பு மற்றும் பிரேக்கிங் அமைப்புகளுக்கான தொழிற்சாலையை அமைக்க ரூ.2000 கோடி முதலீடு செய்கிறது.
- Nordex Group நிறுவனம் ரூ.1000 கோடி முதலீட்டில் காற்றாலை உற்பத்தியை விரிவாக்கம் செய்யவுள்ளது.
Guidance Tamil Nadu நிறுவனம் ஜேர்மனியின் Next Mitteldtand (Ausdildung) நிறுவனத்துடன் இணைந்து ஜேர்மனியின் இரட்டை தொழிற்பயிற்சி முறைமையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துகிறது.
ஆரம்பத்தில் 120 மாணவர்கள் பயிற்சி பெற, 10 ஆண்டுகளில் 20,000 மாணவர்களுக்கு விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Tamil Nadu investment 2025, European companies India, MK Stalin Germany visit, TN Rising Europe summit, Tamil Nadu MoU Germany, Foreign direct investment Tamil Nadu, EU firms invest in India, Tamil Nadu job creation, Germany vocational training India, TN industrial growth 2025