"We love you Joe” அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்ணீருடன் பிரியாவிடை!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்ணீருடன் தனது ஜனநாயக கட்சி மாநாட்டில் பிரியாவிடையை அளித்த போது பெரும் வரவேற்பை பெற்றார்.
ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகி ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜோ பைடனை சொந்த கட்சிக்காரர்களே அவரது வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி விமர்சிக்க தொடங்கினர்.
இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார்.
I love you, America. pic.twitter.com/9m8WPGVkxz
— Joe Biden (@JoeBiden) August 20, 2024
அத்துடன் அமெரிக்காவின் முதல் பெண், தெற்காசிய வம்சாவளியை கொண்ட அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸை புதிய ஜனாதிபதி வேட்பாளராகவும் ஜோ பைடன் முன்மொழிந்தார்.
பிரித்தானியாவில் கோவிட் தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர்: இழப்பீடு சிலருக்கு மட்டுமே
கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, டொனால்ட் டிரம்பிற்கும், கமலா ஹாரிஸுக்கும் இடையிலான போட்டி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
பெரும் வரவேற்பு
இந்நிலையில் திங்கட்கிழமை சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயக கட்சி மாநாட்டில் கண்ணீருடன் பிரியாவிடையை அளித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அவரது கட்சியினர் பெரும் வரவேற்பு ஆரவாரம் வழங்கினர்.
இந்த செவி அடைக்கும் கைத்தட்டலுக்கு மத்தியில் 81 வயது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்ணீர் மல்க "I love you," என கூட்டத்தினரை நோக்கி தெரிவித்தார்.
BREAKING: The crowd has erupted in applause for President Biden. This is an emotional but important moment. Democrats love Joe Biden. Retweet so all Americans see this and can thank President Biden for his years of selfless service. pic.twitter.com/cLWmQHpRUs
— Kamala’s Wins (@harris_wins) August 20, 2024
இதனை தொடர்ந்து கூட்டத்தினரும் "We love you Joe" கோஷங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
இந்த பிரியாவிடையின் போது தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் திடீரென மேடையில் தோன்றி நாட்டின் சிறந்த ஜனாதிபதியாக இருப்பதற்கு நன்றியை தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |