உலகத்தை மாற்றிய 5 சிறந்த ஈரானிய பணக்காரர்கள்
உலகத்தை மாற்றிய ஐந்து சிறந்த ஈரானிய தொழிலதிபர்களைப் பற்றி இங்கே நாம் பார்க்கலாம்.
இஸ்ரேல்-ஈரான் போர் மற்றும் அதனுடன் கூடிய பரபரப்பான நிகழ்வுகளால் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஈரானியர்கள் கட்டியெழுப்பிய பில்லியன் டொலர் வணிக சாம்ராஜ்ஜியங்கள் பற்றி நாம் அறிந்துகொள்ள மறந்துவிட்டோம்.
உலகளாவிய தொழில்நுட்பம், நிதி மற்றும் விண்வெளி துறைகளில் ஈரானியர்களின் தாக்கம் குறிப்பிடத்தக்கது.
1. பியர் ஒமிட்யார் (Pierre Omidyar)
சொத்து மதிப்பு: $10.4 பில்லியன்
eBay நிறுவனத்தை 1995-ல் தொடங்கி உலகத்தின் தலைசிறந்த ஓன்லைன் ஏலவிலையை உருவாக்கினார்.
PayPal-ஐ வாங்கியதும், தொண்டு முயற்சிகளும் அவரை உலகச் செல்வந்தர்களில் முன்னிலையில் நிறுத்துகின்றன.
2. பெஹ்தாத் எக்பாலி (Behdad Eghbali)
சொத்து மதிப்பு: $4.4 பில்லியன்
Clearlake Capital நிறுவனத்தை தொடங்கிய இவர், $90 பில்லியன் மதிப்பில் சொத்துகளை நிர்வகிக்கிறார். 2022-ல் Chelsea FC-யை வாங்கியதில் முக்கிய பங்காற்றினார்.
3. ஃபர்ஹாத் மோஷிரி (Farhad Moshiri)
சொத்து மதிப்பு: $2.8 பில்லியன்
முன்னர் Deloitte இல் கணக்காய்வாளராக இருந்த மோஷிரி, பின்னர் ஏராளமான உலகளாவிய முதலீடுகள் மூலம் பணக்காரர் ஆனார். Arsenal FC மற்றும் Everton FC-இல் பங்கு பெற்றிருந்தார்.
4. காம் கபாரியன் (Kam Ghaffarian)
சொத்து மதிப்பு: $2.5 பில்லியன்
விண்வெளி மற்றும் அணு சக்தித் துறைகளில் முன்னோடி. 2024-ல் நாசாவுக்குப் பிறகு முதன்முறையாக நிலவில் இறங்கிய 'Intuitive Machines' நிறுவனம் இவரது வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது.
5. ஐசக் லாரியன்(Isaac Larian)
சொத்து மதிப்பு: $1.1 பில்லியன்
MGA Entertainment நிறுவனம் மூலம் Bratz பொம்மைகளை உருவாக்கியவர். Mattel நிறுவனத்துடன் நடந்த வழக்கில் வெற்றி பெற்றதும், MGA-வை உலகின் மிகப்பாரிய தனியார் பொம்மை நிறுவனமாக மாற்றியது.
இந்த ஈரானிய பணக்காரர்களின் சாதனைகள், அவர்களின் வேர்கள் எங்கு இருந்தாலும், உலகளாவிய ரீதியில் தாக்கம் ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கின்றன.
போர் மற்றும் அரசியல் பதற்றத்தையும் மீறி, அவர்கள் உருவாக்கியசாம்ராஜ்யம் நமக்கு முன்மாதிரியாக இருக்கின்றன.

சீனாவிற்கு செல்லவிருந்த கப்பலை இந்தியாவிற்கு வரவைத்த அம்பானி - அமெரிக்காவிலிருந்து ஈத்தேன் இறக்குமதி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Richest Iranians 2025 list, Pierre Omidyar net worth Iranian, Behdad Eghbali Clearlake Capital, Farhad Moshiri Everton billionaire, Iranian billionaires in tech and space, Kam Ghaffarian Axiom Space, Isaac Larian Bratz MGA founder