உரிமைக்காக போராடும் ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் - வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
உக்ரைனின் சுதந்திரம், உரிமைக்காக தங்கள் வீரர்கள் போராடுவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதிவிட்டுள்ளார்.
நேட்டோ மாநாட்டில் ஜெலென்ஸ்கி
லிதுவேனியாவில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கலந்துகொண்டார்.
அங்கு, 'உக்ரைன் நேட்டோவில் இருக்குமா என்பது பற்றிய சந்தேகங்கள் அல்லது தெளிவின்மையை நாங்கள் நீக்கிவிட்டோம். அது இருக்கும்' என ஜெலென்ஸ்கி கூறிய அறிக்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
Reuters
அதேபோல் வியாழன் அன்று வெளியிட்ட கருத்துக்களில், நேட்டோ உச்சிமாநாடு உக்ரைனுக்கு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு அடித்தளத்தை அளித்து, கூட்டணியில் அங்கத்துவம் பெறுவதற்கான பாதையில் வைத்தது என்றார் ஜெலென்ஸ்கி.
Reuters
வீரர்களுக்கு நன்றியுள்ளதாக இருக்கும் உக்ரைன்
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் உக்ரைன் இராணுவ வீரர்கள், ஏவுகணைகள் ஏவுதல் உள்ளிட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஜெலென்ஸ்கி,
'உக்ரைனின் சுதந்திரத்திற்காக, கண்ணியத்திற்காக, மக்கள் அனைவரது வாழ்வதற்கான உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். எங்கள் வீரர்களுக்கு, எங்கள் ஹீரோக்களுக்கு, போராடும் அனைவருக்காகவும் உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும்' என தெரிவித்துள்ளார்.
We are fighting for freedom and independence for Ukraine. For dignity, for the right to life for all our people, all over Ukraine. Ukraine will always be grateful to everyone who fights for it. To our soldiers. To our heroes. pic.twitter.com/VrwmFZkW2L
— Володимир Зеленський (@ZelenskyyUa) July 14, 2023
இதற்கு முன்பாக ஜெலென்ஸ்கி தனது வீடியோவில், சுதந்திரம் பெற்றதில் இருந்து முதல் முறையாக உக்ரைன் நேட்டோவுக்கான பாதையில் பாதுகாப்புக்கான அடித்தளத்தை நாங்கள் நிறுவியுள்ளோம் என கூறியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |