ரஷ்யாவிற்கு எதிராக களமிறங்கும் பிரித்தானிய ஏவுகணைகள்: தயார் நிலையில் உக்ரைனிய படைகள்
உக்ரைனுக்கு ஹார்பன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் வான்பரப்பில் இருந்து தாக்கக்கூடிய ஏவுகணைகளை பிரித்தானியா வழங்கலாம் என தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவிற்கு சுற்றுப் பயணம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கும் நிலையில், ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராட கூடுதலான ஆயுதங்கள் வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் முன்வைத்து வருகிறார்.
இதற்காக சமீபத்தில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முதல் முறையாக பிரித்தானியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
hangout
அங்கு பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து விமானங்கள் மற்றும் இதர இராணுவ உதவிகள் தொடர்பான கோரிக்கையை முன் வைத்தார்.
அத்துடன் ரஷ்ய படையெடுப்பின் முதல் நாட்களிலிருந்து உக்ரைனுக்கு பிரித்தானியா அளித்து வரும் ஆதரவிற்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
பிரித்தானியா உதவி
இந்நிலையில் பிரித்தானியா உக்ரைனுக்கு Harpoon கப்பல் எதிர்ப்பு ஏவுகணை மற்றும் வான் பரப்பில் இருந்து இலக்கை தாக்கக்கூடிய Storm Shadow ஏவுகணை ஆகியவற்றை வழங்குவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Alamy
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பாதுகாப்பு நிருபர் ஜார்ஜ் கிரில்ஸ், நவீன உலகில் மிகப்பெரிய ஐரோப்பிய எதிர்ப்பு சக்தியுடன் போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனிய பாதுகாப்பு வீரர்கள் பிரித்தானியாவின் புதிய ஏவுகணைகளை கிரிமியாவில் உள்ள ரஷ்ய படைகளுக்கு எதிராக பயன்படுத்த தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.