ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதல் நியாயமானது: ஜேர்மன் அரசு கருத்து
ரஷ்ய பிராந்தியத்திற்குள் உக்ரைனிய ஆயுதப்படை நடத்திய சமீபத்திய ட்ரோன் தாக்குதல் சர்வதேச சட்டத்தின் பார்வையில் நியாயமானது என்று ஜேர்மன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மூன்று நாள் தொடர் வான்வழி தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நிகழ்த்தியது.
இந்த தாக்குதலில் மாஸ்கோவில் உள்ள கட்டிடம் ஒன்று சேதமடைந்தது, ஆனால் இதில் பொதுமக்கள் யாருக்கும் தீவிரமான காயங்கள் ஏற்படவில்லை.
Moscow is under massive drones attack.
— Ukraine Front Lines (@EuromaidanPR) May 30, 2023
Witness; “…maybe better to get out of here, they are getting closer and closer..” pic.twitter.com/25zMDZRL7m
இருப்பினும் ரஷ்ய பிராந்தியத்திற்குள் உக்ரைன் நடத்திய இந்த தாக்குதல் உலக அரங்கில் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது.
உக்ரைன் தாக்குதல் நியாயமானதே
இந்நிலையில் சர்வதேச சட்டத்தின் பார்வையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நடத்திய தாக்குதல் நியாயமானது என்றே ஜேர்மன் அரசு கருதுகிறது என ஜேர்மன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
German government considers strikes by the Armed Forces of Ukraine against facilities on Russian territory legitimate from the point of view of international law.
— NEXTA (@nexta_tv) May 31, 2023
Ukraine can launch strikes on Russian territory in self-defense against the background of a full-scale war, German… pic.twitter.com/fBSQK2nmnr
முழுநீளப் போரின் பின்னணியில் தற்காப்பிற்காக ரஷ்ய நிலப்பரப்பு மீது உக்ரைன் தாக்குதல் நடத்த முடியும் என்று ஜேர்மன் அரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டெஃபென் ஹெபஸ்ட்ரீட் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் இத்தகைய தாக்குதலுக்கு ஜேர்மன் ஆயுதங்களை பயன்படுத்துவதை ஜேர்மன் நாட்டு அதிகாரிகள் முற்றிலும் எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.