சூடு பிடிக்கும் பதிலடி தாக்குதல்: 50 சதவீத இடத்தை ரஷ்யாவிடம் இருந்து மீட்டெடுத்த உக்ரைன்
போரின் ஆரம்ப கட்டத்தில் ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் உக்ரைன் திருப்பி கைப்பற்றி விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யாவின் போர் நடவடிக்கையின் ஆரம்ப கட்டங்களில் ரஷ்ய படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைனிய படைகள் பல்வேறு இடங்களில் இருந்து பின்வாங்கி இருந்தது.
ஆனால் மேற்கத்திய நாடுகளின் தந்திரோபாய மற்றும் ராணுவ ஆயுத உதவிகள் உக்ரைனுக்கு கூடுதல் பலமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் கூட உக்ரைனுக்கு அமெரிக்கா கிளஸ்டர் குண்டுகளை வழங்க இருப்பதாக அறிவித்தது உலக அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.
Twitter
அதே வரிசையில் உக்ரைனுக்கு பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளும் தொடர் ஆதரவையும், ராணுவ உதவியையும் வழங்கி வருகின்றனர்.
மேற்கத்திய நாடுகளின் இந்த முழுமையான ஆதரவை தொடர்ந்து, உக்ரைன் சமீபத்தில் ரஷ்ய படைகளுக்கு எதிராக பதிலடி தாக்குதலை தொடங்கியது.
50 சதவீத இடங்களை மீண்டும் கைப்பற்றிய உக்ரைன்
இந்நிலையில் போரின் ஆரம்ப கட்டத்தில் உக்ரைனிடம் இருந்து ரஷ்ய படைகள் கைப்பற்றிய பெரும்பாலான இடங்களில் 50 சதவீத இடங்களை உக்ரைன் மீண்டும் கைப்பற்றி விட்டதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக CNNக்கு அவர் அளித்த பேட்டியில், ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதியை உக்ரைன் திரும்ப கைப்பற்றி கொண்டுள்ளது.
Twitter
பிப்ரவரி-யின் தொடக்கத்தில் கட்டத்தில் ரஷ்யா கைப்பற்றி இருந்த இடங்களில் 50 சதவீதத்தை உக்ரைன் ஏற்கனவே மீட்டு விட்டது. தற்போது அவர்கள் மீதமுள்ள இடங்களை கைப்பற்ற தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர், இது பதிலடி தாக்குதலின் ஆரம்ப கட்டம் மட்டுமே என தெரிவித்த அவர் இது இன்னும் கடினமானது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்ய படைகளை விட உக்ரைன் படை தங்களது நிலத்திற்காக, மக்களுக்காக, சுதந்திரத்திற்காக போராடி வருகின்றனர் இதுவே உக்ரைன் தரப்பின் வெற்றிக்கு வெற்றி மூலமாக இருக்க போகிறது என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |