ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அருகே உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால் பரபரப்பு!
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் திங்களன்று உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவற்றில் சில சிதைவுகள் நகர மையத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகத்திற்கு அருகில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் நடந்த இந்த தாக்குதலால் மாஸ்கோ மக்கள் திடுக்கிட்டதாக கூறப்படுகிறது.
Moskva News Agency
மேயரின் தகவல்
இதுகுறித்து மேயர் செர்ஜி சோபியானின் கூறும்போது கடுமையான சேதம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
இந்த நிலையில் ஒடெசா மீது நடந்த ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக உக்ரைன் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இதற்கிடையில், மாஸ்கோ அதிகாரிகளின் கூற்றுப்படி , இரண்டு உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்ய தலைநகர் மீது வீழ்த்தப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் மின்னணு போர் முறைகளால் கட்டுப்படுத்தப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
Mikhail Dzhaparidze/TASS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |