பிரித்தானியா அதிரடி... உக்ரைன் போரால் மலைக்க வைக்கும் தொகையை இழந்த ரஷ்ய பெருமுதலாளிகள்
உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்ய ஜனாதிபதிக்கு நெருக்கமான பெருமுதலாளிகளின் பல பில்லியன் மதிப்பிலான சொத்துகள் பிரித்தானியாவால் முடக்கப்பட்டுள்ளதன் உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் வெளியான உத்தியோகப்பூர்வ தகவலில், மொத்தம் 18 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்கள் என முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
@theguardian
1,200க்கும் மேற்பட்ட தனி நபர்கள்
உக்ரைன் போர் தொடர்பில் முன்னாள் செல்சி அணி உரிமையாளர் ரோமன் அப்ரமோவிச் உட்பட 1,200க்கும் மேற்பட்ட தனி நபர்கள் பிரித்தானியாவின் தடைக்கு இலக்கானார்கள்.
பிரித்தானியாவில் இவர்களுக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டதுடன் பயணத் தடையும் விதிக்கப்பட்டது. அத்துடன், விமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உட்பட 120 நிறுவனங்கள் இங்கிலாந்து நிதிச் சந்தைகளில் பணம் திரட்டுவதில் இருந்தும் தடுக்கப்பட்டன.
@getty
ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டதால், போருக்கான கருவிகள், தொழில்நுட்பம் உள்ளிட்டவை விளாடிமிர் புடினின் போர் தொடர்பான திட்டங்களை கடுமையாக பாதித்தது. இதனால், சோவியத் காலகட்டத்து ராணுவ டாங்கிகளை உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
சிதைந்து வரும் ரஷ்யாவின் பொருளாதாரம்
மட்டுமின்றி, உலகளாவிய பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவின் பொருளாதாரம் சிதைந்து வருகிறது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு முந்தைய கணிப்புகளுடன் ஒப்பிடுகையில் ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 6.2 சதவீதம் குறையும் என்று தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 22 முதல் அக்டோபர் 29 வரை பிரித்தானியாவில் உள்ள ரஷ்யர்களின் 18.39 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் அன்-மேரி ட்ரெவெல்யன் தெரிவிக்கையில், உக்ரைன் மீது படையெடுத்தபோது நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்து விடுவோம் என்று புடின் கருதியிருப்பார், இந்த கொடூரமான போரில் புடினை வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.