கெர்சன் எங்கள் உரிமை…பின்வாங்கல் புடினுக்கு அவமானம் இல்லை: வீரர்கள் வெளியேறும் வீடியோ
கெர்சன் நகரில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கி கொள்ளப்பட்டாலும், அது ரஷ்யாவின் ஒற்றை பகுதி என ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனிய படைகளின் தீவிர தாக்குதல் மற்றும் ரஷ்ய போர் வீரர்களின் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக கெர்சன் நகரம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்து உக்ரைனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
பின்வாங்கிய ரஷ்ய படைகள்
உக்ரைனில் நடைபெற்ற எட்டு மாத காலப் போரில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சன் நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளனர்.
இது தொடர்பாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வெள்ளிக்கிழமை 5 மணிக்கு ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்பட்டது என்றும் மேற்குக் கரையில் இராணுவ உபகரணங்கள் எதுவும் இல்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
⚡️⚡️ Residents of #Kherson meet the fighters of the Armed Forces of #Ukraine in the city center and chanting: "AFU!". pic.twitter.com/vsw0tLXshH
— NEXTA (@nexta_tv) November 11, 2022
ரஷ்யாவின் இந்த பின்வாங்குதலை தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மூலம் கெர்சன் நகரத்தின் மையத்தில் குடியிருப்பாளர்களால் உக்ரைனிய கொடி ஏற்றப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
கெர்சன் ரஷ்யாவின் ஒற்றை பகுதி
ரஷ்ய படைகள் திரும்பப் பெற்றது என்பது ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அவமானகரமானது என ஒப்புக்கொள்ள ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார்.
அத்துடன் கெர்சன் பகுதி ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே மாஸ்கோ பார்க்கிறது, இவை சட்டபூர்வமாக நிலையானது மற்றும் வரையறுக்கப்பட்டது என டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
#Russian occupiers leave #Kherson. pic.twitter.com/TlozMjhlWo
— NEXTA (@nexta_tv) November 11, 2022
மேலும் ரஷ்யாவின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் இல்லை மற்றும் எந்த மாற்றங்களும் இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.