மத்திய கிழக்கில் பதற்றம்: இந்த நாட்டை விட்டு அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்!
அமெரிக்க குடியுரிமை கொண்டவர்கள் எத்தகைய விமான டிக்கெட்டுகள் கிடைத்தாலும், அதனை பயன்படுத்தி லெபனான் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்
புதன்கிழமை ஹமாஸ் போராளிக் குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டார்.
அதற்கு சற்று முன்னதாக லெபனானின் ஈரான் ஆதரவு புரட்சி படையான Hezbollah-வின் தளபதி Fuad Shukr பெய்ரூட்டில்(Beirut) வைத்து இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், ஹமாஸ் தலைவரின் படுகொலைக்கான பழிவாங்கல், சரியான நேரத்தில், சரியான இடத்தில் இஸ்ரேலுக்கு கொடுக்கப்படும் என்று ஈரானின் புரட்சிகர காவலர்கள் எச்சரித்துள்ளது.
ஈரான் பதிலடி தாக்குதலை தொடர்ந்தால், அதற்கு லெபனானின் Hezbollah அமைப்பும் உறுதுணையாக இருக்க கூடும், இதற்கு இஸ்ரேலும் எதிர்வினை ஆற்றக்கூடும் எனவே மத்திய கிழக்கில் உச்சநிலை பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்
இந்நிலையில், அமெரிக்க குடியுரிமை கொண்டவர்கள் எத்தகைய விமான டிக்கெட்டுகள் கிடைத்தாலும், அதனை பயன்படுத்தி லெபனான் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு பெய்ரூட்டில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து அமெரிக்க தூதரகம் சனிக்கிழமை மேலும் வழங்கிய தகவலில், அமெரிக்க குடியுரிமை கொண்டவர்கள் யாரெல்லாம் லெபனானில் தங்கி இருக்க விரும்புகிறார்களோ, அவர்கள் “தற்செயல் திட்டங்களை உடனடியாக தயாரித்து வைத்துக் கொள்ளவும்”, நீண்ட காலத்திற்கு தங்குவதற்கான இருப்பிடத்தை உறுதி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சில விமான நிறுவனங்கள் தங்கள் விமான சேவையை இடைநிறுத்தி உள்ளனர், அதே சமயம் போக்குவரத்தில் உள்ள விமானங்களிலும் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |