ஹமாஸ் பிடியில் உயிருடன் இருக்கும் 20 பிணைக் கைதிகள் விடுதலை எப்போது?
ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் விடுவிப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிணைக் கைதிகள் விடுதலை
அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சிகளின் விளைவாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த அமைதி ஒப்பந்தமானது அமுலுக்கு வந்துள்ளது.
காசா நகரில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்கியுள்ள நிலையில், ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பிணைக் கைதிகள் விடுவிப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஹமாஸ் பிடியில் இன்னும் உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் அனைவரும் திங்கட்கிழமை காலை விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் எதிர்பார்ப்பதாக தெரியவந்துள்ளது.
அதே சமயம் உயிரிழந்த பிணைக் கைதிகள் உடலும் விடுவிக்கப்படும் என்று இஸ்ரேல் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
பிணைக் கைதிகள் விடுவிப்பு குறித்த சரியான நேரம் தெரியவரவில்லை, ஆனால் உள்ளூர் நேரப்படி நாளை காலை 12:00 மணி வரை ஹமாஸுக்கு அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கில் டிரம்ப்
அமைதி ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை மத்திய கிழக்கிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
எகிப்தில் நடைபெற உள்ள சர்வதேச உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |