உக்ரைன் ஹீரோக்களுக்கு வீரப்பதக்கம்! வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மகிழ்ச்சி
தங்கள் நாட்டின் பாதுகாவலர்களை வாழ்த்தி விருது வழங்கும் பெருமை தனக்கு கிடைத்ததாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கத்தார் உதவி அறிவிப்பு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி Mykolaiv, Ochakiv நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களைநேரில் சந்தித்து பேசினார்.
Twitter (@ZelenskyyUa)
அதனைத் தொடர்ந்து கத்தார் பிரதமரை சந்தித்து ஜெலென்ஸ்கி கலந்துரையாடினார். பின்னர் உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை வழங்குவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்தார்.
ஜெலென்ஸ்கி பெருமிதம்
இந்த நிலையில் உக்ரைனின் ஹீரோக்களுக்கு பதக்கங்களை ஜெலென்ஸ்கி வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'இன்று ஒரு முக்கியமான மற்றும் நல்ல நாள். காலையில் மாநில தினத்தை முன்னிட்டு எங்கள் பாதுகாவலர்களை வாழ்த்தி விருது வழங்கும் பெருமை எனக்கு கிடைத்தது. தைரியமான உத்தரவுகளை பின்பற்றிய உக்ரைனின் ஹீரோக்களுக்கு தங்க பதக்கங்கள், Crosses of Combat Merit மற்றும் order of Bohdan Khmelnytsky பதக்கங்கள் வழங்கப்பட்டன.
அதேபோல், போர் படைப்பிரிவுகள் மற்றும் எல்லைப் பிரிவுகளுக்கு மரியாதைக்குரிய மதிப்பெண்களை வழங்கிய பெருமையும் எனக்கு கிடைத்தது. இப்படிப்பட்ட போர் வீரர்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி' என தெரிவித்துள்ளார்.
Today was an important and good day. In the morning on the occasion of Statehood Day, I had the honor to congratulate and award our defenders. Gold Stars to Heroes of Ukraine, Crosses of Combat Merit, orders of Bohdan Khmelnytsky, orders For Courage... I also had the honor of… pic.twitter.com/Tov0T7PaFq
— Володимир Зеленський (@ZelenskyyUa) July 28, 2023
Twitter (@ZelenskyyUa)
Twitter (@ZelenskyyUa)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |