கொலை, போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்புடன் விவாதிப்பேன்: இடத்தை அறிவித்த ஜெலென்ஸ்கி
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை சந்திக்க உள்ளதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தொலைபேசி உரையாடல்
அலாஸ்காவில் ட்ரம்ப் மற்றும் புடின் இருவரும் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக சந்திப்பு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வாஷிங்டனில் டொனால்டு ட்ரம்ப்பை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி ஆகிய இரு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடல் நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே ஜெலென்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அவர், ட்ரம்புடன் கொலைகளுக்கு முடிவு மற்றும் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து விவாதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் அழைப்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றும், அவருடன் நீண்ட மற்றும் அர்த்தமுள்ள உரையாடலை நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |