நேட்டோவில் உக்ரைன் இணைவது..ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்த ஜெலென்ஸ்கி கூறிய விடயம்
நேட்டோவில் உக்ரைன் இணைவது தவிர்க்க முடியாதது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜெலென்ஸ்கி ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட ஆயுத உதவி கோரினார். முன்னதாக தலைவர்களை தாண்டி போப் பிரான்சிஸையும் சந்தித்து ஜெலென்ஸ்கி ஆதரவு கோரியிருந்தார்.
Image: AFP
இந்த நிலையில் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துள்ள அவர் ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
நேட்டோவில் இணையும் உக்ரைன்
அதில், 'இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், கிரேட் பிரித்தானியா...புதிய பாதுகாப்பு பொதிகளுடன் நாடு திரும்புகிறோம். முன்னணிக்கு இன்னும் புதிய மற்றும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள், ரஷ்ய பயங்கரவாதத்தில் இருந்து நமது மக்களுக்கு அதிக பாதுகாப்பு, அதிக அரசியல் ஆதரவு கிடைத்துள்ளது.
அனைத்து கூட்டங்களிலும் நாங்கள் எங்கள் அமைதி பார்முலாவை பற்றி விவாதித்தோம். இப்போது உக்ரைன் பார்முலாவை பின்பற்ற எங்கள் கூட்டாளர்கள் அதிக விருப்பம் கொண்டுள்ளனர்.
Image: AFP
ஐரோப்பிய ஒன்றியத்தில் நாம் இணைவதற்கு அதிக ஆதரவு உள்ளது, நேட்டோவில் உக்ரைன் இணைவது தவிர்க்க முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, இந்த நாட்களின் முக்கிய முடிவுகள்: உக்ரைனுக்கான புதிய ஆயுதங்கள், உக்ரேனியர்களுக்கு மரியாதை மற்றும் எங்கள் வெற்றி நெருக்கமாக கொண்டு வரப்பட்டுள்ளது. உதவிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!' என தெரிவித்துள்ளார்.