புடினிடம் இதை சொல்லுங்கள்! எதிர்த்தாக்குதலில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
ரஷ்யாவிற்கு எதிரான எதிர்தாக்குதல் குறித்து பேசும்போது விரிவாகப் பேச மாட்டேன் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நீளும் போர்
ஒன்றரை ஆண்டுகாலமாக போர் நீண்டு வரும் நிலையில் கிழக்கு மற்றும் தெற்கில் உக்ரைன் தாக்குதல்களை முறியடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஆனால், உக்ரைனுக்கு வருகை புரிந்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்தபோது, அவரிடம் இருந்து இராணுவ உதவிக்கான புதிய உறுதிமொழிகளை ஜெலென்ஸ்கி பெற்றார்.
sergey dolzhenko/Shutterstock
உக்ரைனின் எதிர்த்தாக்குதல்
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக நடந்து வரும் எதிர்த்தாக்குதல் குறித்து ஜெலென்ஸ்கி கூறுகையில், 'உக்ரைனில் எதிர்த்தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. அந்த கட்டத்தில் நான் விரிவாகப் பேச மாட்டேன். எங்கள் எதிர்த்தாக்குதல் குறித்து புடின் கூறியது சுவாரஸ்யமானது.
ரஷ்யா எப்போதும் இதை உணருவது முக்கியம்: அவர்கள் நீண்ட காலம் எஞ்சியிருக்கவில்லை என்பது என் கருத்து. எல்லோரும் இப்போது நேர்மறை சிந்தனையுடன் உள்ளனர் - இதனை புடினிடம் கூறுங்கள்!' என தெரிவித்துள்ளார்.
president.gov.ua
இதற்கிடையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10 மில்லியன் டொலர்களை உக்ரைனுக்கு வெள்ள நிவாரணமாக அளிப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Getty Images