பீரங்கிகள், வெடிமருந்துகள்..ஜோ பைடனுக்கு நன்றி - உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
1.3 பில்லியன் டொலர் நிதியுதவி அளித்ததற்கு ஜோ பைடனுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
உணவு கிடங்குகள் மீது தாக்குதல்
ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் படைகள் போராடி வரும் நிலையில், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பல நாடுகளின் உதவியை நாடி வருகிறார்.
ஆனால் ரஷ்ய படைகள் கீவ் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் உணவு தானியக் கிடங்குகள் தீப்பற்றி எரிந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஜோ பைடனுக்கு நன்றி
இந்த நிலையில் பாதுகாப்பு ஆதரவு அளித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், '1.3 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள சக்தி வாய்ந்த புதிய பாதுகாப்பு ஆதரவு தொகுப்புக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நன்றி. வெடிமருந்துகள், பீரங்கி குண்டுகள், கண்ணிவெடி அகற்றும் கருவிகள் மற்றும் பிற தேவைப்படும் உதவிகளுடன் கூடிய NASAMS விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் உக்ரைன் உயிர்களை காப்பாற்றி, நமது பொதுவான வெற்றியை நெருங்க வழிவகுக்கும். நட்பான அமெரிக்க மக்களிடம் இருந்து கொடிகாட்டாத ஆதரவைப் பாராட்டுகிறோம்' என தெரிவித்துள்ளார்.
Thank you @POTUS for a powerful new defense support package worth $1.3 billion. NASAMS anti-aircraft missile systems with ammunition, artillery shells, mine clearance equipment, and other much-needed assistance will save ?? lives and bring our common victory closer. We appreciate…
— Володимир Зеленський (@ZelenskyyUa) July 19, 2023
மேலும் அவரது மற்றொரு பதிவில், ஒடேசா மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
Susan Walsh/AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |