சூடானில் அணையை உடைத்த பெருவெள்ளம்: 30 பேர் வரை உயிரிழப்பு, 200 பேரை காணவில்லை!
பெருவெள்ளம் காரணமாக சூடான் நாட்டில் அணை உடைந்த நிலையில், அதில் குறைந்தது 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பெரு வெள்ளத்தில் உடைந்த அணை
கிழக்கு சூடானில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நீர்தேக்க அணை உடைந்து 20 கிராமங்களை துடைத்தெறிந்து உள்ளது. அதிக மழை காரணமாக உருவான வெள்ளம் போர்ட் சூடானின் வடக்கே 40கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அர்பாத் அணையை(Arbaat Dam) சேதப்படுத்தியது.
இந்த பயங்கர சம்பவத்தில் குறைந்தப்பட்சம் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ள நிலையில், 150 முதல் 200 பேர் வரை காணாமல் போகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிப்புக்குள்ளான பகுதி அடையாளம் தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதுடன், மின்சாரம் மற்றும் நீர் குழாய் இணைப்புகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
ஐ.நா தகவல்
இந்த பெருவெள்ளத்தில் சுமார் 50,000 பேரின் வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் அதிகாரிகளின் தகவலை மேற்கோள்காட்டி ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் மாதக்கணக்கான உள்நாட்டு போரின் விளைவாக இந்த பகுதி ஏற்கனவே மீள முடியாமல் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |