ரஷ்யா நடத்திய நள்ளிரவு வான் தாக்குதல்: சேதமடைந்த அமெரிக்க பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பு
உக்ரைனில் நிலைநிறுத்தப்பட்டு இருந்த பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு சேதமடைந்து உள்ளது என்று அமெரிக்க தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் ரஷ்யா நடத்திய வான் தாக்குதல்
உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா திங்கட்கிழமை இரவு திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், உக்ரைனின் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
ரஷ்ய தரப்பு வெளியிட்ட தகவலில், அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட பேட்ரியாட்(Patriot missile defense system) ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பை கின்சல் ஏவுகணை கொண்டு ரஷ்யா ஒரே நாள் இரவில் நடத்திய வான் தாக்குதலில் அழித்து இருப்பதாக அறிவித்தது.
BREAKING: Defense Ministry spokesman says last night Russia destroyed 15 Leopard tanks, 8 Patriot systems, an underground NATO mosquito training centre, American mercenary group called "The Expendables" and the entire Swiss Navy with just one hypersonic Kinzhal missile pic.twitter.com/2fTRPBpVeZ
— Sputnik (@Sputnik_Not) May 16, 2023
ஆனால் இதை மறுத்த உக்ரைன் தரப்பு ரஷ்யா நடத்திய நள்ளிரவு வான் தாக்குதலை உக்ரைன் முழு பலம் கொண்டு தடுப்பு இருப்பதாகவும், 6 கின்சல்(Kinzhal) ஏவுகணைகள் உட்பட 18 ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பு வானிலேயே இடைமறித்து அழித்தாக தெரிவித்து இருந்தது.
மேலும், அமெரிக்காவின் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பை முற்றிலுமாக அழித்தாக ரஷ்ய முன்வைத்த தகவலை உக்ரைன் தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக வான் படை செய்தி தொடர்பாளர் யூரி இக்னாட் வெளியிட்டுள்ள குறிப்பில், பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பானது ஒன்றில் இருந்து மற்றொன்று குறிப்பிட்டதக்க இடைவெளியில் நிலைநிறுத்தப்பட்டு இருப்பதாகவும், இதனை ஒற்றை கின்சல் ஏவுகணை கொண்டு அழித்துவிடுவது என்பது சாத்தியமற்றது என்றும் தெரிவித்து இருந்தார்.
Air Force Speaker Yuri Ignat denied the destruction of the #Patriot air defense system
— NEXTA (@nexta_tv) May 17, 2023
According to him, all the components of the complex are at a considerable distance from each other. Given the complexity of this complex, it is impossible to destroy it with one "Kynzhal".… pic.twitter.com/d6petCQVvX
உறுதிப்படுத்தப்பட்ட சேதம்
இந்நிலையில் அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பு ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் சில குறிப்பிடத்தக்க சேதங்களை அடைந்து இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவை முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்றும், அவற்றை உக்ரைனில் இருந்து வெளியேற்ற எந்த தேவையும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சிறந்த முறையில் சரிசெய்வது குறித்து அமெரிக்கா மற்றும் உக்ரைன் தரப்பு ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Ukrainian Army shot down SIX hypersonic Kinzhal missiles last night.
— Visegrád 24 (@visegrad24) May 16, 2023
The Patriot Missile Defense System is a game changer! pic.twitter.com/HfcNQFQIEI
அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட இந்த பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பானது அமெரிக்காவின் மிகவும் மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும்.
இவை ரஷ்யாவின் போர் தாக்குதலை எதிர்த்து போராட உக்ரைனுக்கு அமெரிக்காவால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Twitter(Oleksii Reznikov
)