புடின் ஆதரவாளருடைய மகள் மர்மமான முறையில் மரணம்
புடின் ஆதரவாளர் ஒருவருடைய மகள், மாஸ்கோவிலுள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகம்
புடின் ஆதரவாளரான Vasily Bochkarev என்பவருடைய மகள் நட்டாலியா (Natalia Bochkareva, 44). மாஸ்கோவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வாழ்ந்துவந்தார் அவர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, நட்டாலியா வாழ்ந்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மேலாளர் அவரது அறைக்கதவை வெகுநேரம் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து அவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
பொலிசார் கண்ட காட்சி
பொலிசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, நட்டாலியா வீட்டுக்குள் உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது. பொலிசார் நட்டாலியாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், சாபம் ஒன்றை நீக்குவதாகக் கூறி, ஜோதிடர் என்று தன்னை அழைத்துக்கொண்ட ஒருவர் நட்டாலியாவிடம் 136,000 பவுண்டுகளை வாங்கிக்கொண்டு தலைமறைவானது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |