உக்ரைன் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: ஜெலென்ஸ்கி அவசர ஆலோசனை
உக்ரைனின் டினிப்ரோவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் கட்டிடம் மீது ரஷ்யா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான டினிப்ரோவில்(dnipro) உள்ள குடியிருப்பு கட்டிடம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் கட்டிடம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தபட்சமாக 9 பேர் படுகாயமடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பிரம்மாண்டமான குடியிருப்பு கட்டிடத்தின் மேல் தளம் முழுவதும் சிதைக்கப்பட்டு இருப்பதை பிபிசி குழு உறுதிப்படுத்தியுள்ளது.
Dnipro. Friday evening. A high-rise building and the Security Service of Ukraine's building were hit. Russian missile terror again.
— Володимир Зеленський (@ZelenskyyUa) July 28, 2023
Promptly held conversations with the Security Service of Ukraine, the Ministry of Internal Affairs, the State Emergency Service, and the military… pic.twitter.com/UulEGKjQUj
இது தொடர்பாக டெலிகிராமில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோவில், ஏவுகணை தாக்குதலால் சிதைக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறுவதையும், வீதிகளில் தீ பரவி இருப்பதையும் பார்க்கப்படுகிறது.
மேலும் உக்ரைன் பாதுகாப்பு சேவை, உள்துறை அமைச்சகம், அவசர சேவைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர கால ஆலோசனை ஒன்றுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழப்புகள் இல்லை
ரஷ்ய நடத்திய இந்த தாக்குதலில் 14 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காயமடைந்து இருப்பதாகவும், இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் பிராந்திய தலைவர் செர்ஹி லிசாக்(Serhiy Lysak) தெரிவித்துள்ளார்.
At least 9 civilians were injured as a result of yet another missile attack on the city of Dnipro. Among them are two children and a 77-year-old woman. The "high-precision" weapon used by russian terrorists hit an apartment building this time. Since this building was recently… pic.twitter.com/ig3wndgM2L
— Defense of Ukraine (@DefenceU) July 28, 2023
மேலும் ரஷ்ய ஏவுகணையால் தாக்கப்பட்ட குடியிருப்பு கட்டிடம் சமீபத்தில் தான் கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்துள்ளார்.
நல்ல வேளையாக ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டு கட்டிடங்களிலும் மக்கள் யாரும் இல்லாமல் வெற்று கட்டிடங்களாக இருந்தது என்றும் பிராந்திய தலைவர் செர்ஹி லிசாக்(Serhiy Lysak) தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |