ரஷ்ய எல்லைக்குள் நுழைந்து உக்ரேனியர்கள் நாசவேலை: ரஷ்யா குற்றச்சாட்டு
உக்ரேனிய ஆதாவது படையினர் ரஷ்ய எல்லைப் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரேனிய "நாசவேலைக் குழு"
உக்ரேனிய "நாசவேலைக் குழு" ரஷ்ய எல்லைக்குள் நுழைந்து தாக்கியதாகவும், பின்னர் ரஷ்ய பாதுகாப்புப் படையினரால் அவர்களது தாக்குதல் முறியடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டதாகவும், ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் கூறியுள்ளார்.
உக்ரேனிய படையினர் நள்ளிரவைத் தாண்டி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களாக நீடித்த இந்த சண்டையில் பொதுமக்கள் 8 போ் காயமடைந்ததாக பெல்கோரோட் ஆளுநா் கூறினாா்.
Reuters
இதையும் படிங்க: புழக்கத்திற்கு வந்த புதிய 2000 ரூபாய் நோட்டு - ஆனால் மதிப்பு வெறும் 350 ரூபாய் தான்!
70 உக்ரைன் ஆதரவு படையினா் மரணம்
பின்னா் ரஷ்ய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் சுமாா் 70 உக்ரைன் ஆதரவு படையினா் கொல்லப்பட்டதாகவும், எஞ்சியவா்கள் விரட்டியடிக்கப்பட்டதாகவும் ரஷ்ய அரசு செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தாா்.
இந்தத் தாக்குதலில் உள்துறை அமைச்சகத்தின் உள்ளூர் தலைமையகம் மற்றும் FSB பாதுகாப்பு சேவை ஆகியவை குறிவைக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
AP
ரஷ்ய எதிர்ப்புக் குழுக்கள்
இதனிடையே, லிபர்ட்டி ஆஃப் ரஷ்யா லெஜியன் மற்றும் ரஷ்ய தன்னார்வப் படை (RVC) ஆகிய இரண்டு ஆயுதமேந்திய ரஷ்ய எதிர்ப்புக் குழுக்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக உக்ரேனிய இராணுவ உளவுத்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபர்ட்டி ஆஃப் ரஷ்யா லெஜியன் என்பது உக்ரைனை தளமாகக் கொண்ட ரஷ்ய போராளிகள் குழு ஆகும், இது ரஷ்ய எதிர்க்கட்சி பிரமுகர் இலியா பொனோமரேவ் தலைமையிலானது, இது புடினை தூக்கியெறிவதற்காக ரஷ்யாவிற்குள் செயல்படுவதாகக் கூறுகிறது.
Ukraine, Russia, Ukraine-Russia War