ஐரோப்பாவின் கடைசி ஆக்கிரமிப்புக்கு எதிரான போர்களில்..ஜெலென்ஸ்கியின் பதிவு
நமது அடுத்த தலைமுறைக்கு அமைதியை விட்டுச் செல்ல வேண்டும் என உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா கைப்பற்றிய சொத்துக்கள்
உக்ரைனுக்கு எதிரான போரில் பிப்ரவரி 2023யின் நிலவரப்படி, உக்ரைனுக்கு சொந்தமான சுமார் 700 சொத்துக்களை ரஷ்ய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையில், ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலைத் தொடங்குவதற்கு போதுமான ஆயுதங்கள் கீவிடம் இருப்பதாகவும், ஆனால், ஒரு நீண்ட பிரச்சாரத்தைத் தொடர அதற்கு இன்னும் அதிகமான ஆயுதங்கள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.
president.gov.ua
ஜெலென்ஸ்கியின் பதிவு
இந்நிலையில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ட்வீட் ஒன்று செய்துள்ளார். அதில், 'ஐரோப்பாவில் இறுதிக்கட்ட பெரும் ஆக்கிரமிப்பை முறியடித்தவர்கள் மரபுவழியாக விட்டுச் சென்ற அமைதிதான், நமது பெற்றோர்களின் தலைமுறையின் அமைதி. ஐரோப்பாவின் கடைசி ஆக்கிரமிப்புக்கு எதிரான போர்களில் நாம் இப்போது பெற்றுக்கொண்டிருக்கும் அமைதிதான், நமது குழந்தைகளின் தலைமுறையின் அமைதி' என கூறியுள்ளார்.
The peace of our parents' generation is the peace that was left as a legacy by those who defeated the penultimate great aggression in Europe. And the peace of our children's generation is the peace we are gaining right now in the battles against the last aggression in Europe. pic.twitter.com/WFTaaV0H3l
— Володимир Зеленський (@ZelenskyyUa) May 24, 2023