புதிய தோற்றத்தில் கூகுள் பிளே ஸ்டோர்: இப்படித்தான் இருக்குமாம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் மொபைல் சாதனங்களை பயன்படுத்துபவர்கள் பிளே ஸ்டோர் பற்றி அவசியம் தெரிந்திருப்பார்கள்.

காரணம் அன்ரோயிட் இயங்குதளத்திற்கான அப்பிளிக்கேஷன்கள் அனைத்தும் இங்கேதான் கிடைக்கும்.

இங்கு இலவசமாகவும், பணம் செலுத்தியும் அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

கூகுள் நிறுவனம் தற்போது பிளே ஸ்டோரின் இடைமுகத்தினை மாற்றியமைக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி வழமைக்கு மாறாக கீழ்ப் பகுதியில் அப்பிளிக்கேஷன்களை தேடுவதற்கான சட்டகம், Navigation Bar என்பவற்றினை அமைக்கவுள்ளது.

இது பயனர்களுக்கு மிகவும் இலவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இப் புதிய வடிவமைப்பின் மாதிரி அமைப்பிற்கான படமும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers