நூற்றுக்கணக்கான அகதிகளை வரவேற்கும் கனடா! எந்த நாட்டை சேர்ந்தவர்கள் தெரியுமா?

Report Print Raju Raju in கனடா

லிபியாவை சேர்ந்த 750 அகதிகளை கனடாவில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் குடியேற்ற துறை அமைச்சர் அகமத் ஹுசைன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அகமத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே லிபியாவை சேர்ந்த 150 அகதிகளை மறுகுடியேற்றம் செய்யும் தொடர்பான வேலைகள் தொடங்கிவிட்டன.

இதோடு இன்னும் 600 அகதிகள் என 750 அகதிகள் அடுத்த இரண்டாண்டுகளில் கனடாவில் அனுமதிக்கப்படுவார்கள்.

லிபியாவில் உள்ள குடியேற்ற தடுப்பு மையங்களில் உள்ள அகதிகள் அடிமைகளாக விற்கப்படும் செய்தி ஏற்கனவே வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் தான் இம்முடிவை எடுத்துள்ளோம்.

இதோடு Niger நாட்டிலிருந்து 100 அகதிகளை கனடாவில் அனுமதிக்கவும் முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.


மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers