கனடாவில் 10,000-ஐ கடந்த கொரோனா மரணம்! கனேடியர்களுக்கு பிரதமர் முக்கிய எச்சரிக்கை

Report Print Basu in கனடா

தொற்றுநோய் 'உண்மையில் ஏமாற்றமளிக்கிறது’ என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கனடாவில் கொரோனா பலி எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது, மேலும் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 2,20,670 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று நோய் உண்மையிலேயே ஏமாற்றமளிப்பதாக ட்ரூடோ கூறினார்.

மேலும், 2020 இவ்வாறு இருக்க வேண்டும் என்று யாரும் விரும்பவில்லை, ஆனால் நம் கடமையை செய்வதன் மூலம் அது எவ்வளவு மோசமானாலும் அதை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.

குளிர்காலம் கடுமையானதாக இருக்கும் என எச்சரித்த ட்ரூடோ, மக்கள் உத்வேகத்துடன் இருக்குமாறு வலியுறுத்தினார். இல்லையென்றால், விடுமுறை கொண்டாட்டங்கள் தடைபடக்கூடும் என்று குறிப்பிட்டார்.

நாம் உண்மையிலேயே, மிகவும் கவனமாக இல்லாவிட்டால், கிறிஸ்மஸில் நாம் விரும்பும் வகையில் குடும்பங்களுடன் ஒன்றுக்கூட முடியாது என்று ட்ரூடோ கூறினார்.

ஊரடங்கால் மக்கள் மத்தியில் விரகத்தி ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்ட பிரதமர், கனடா இதை கடந்து செல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்