உலகின் செல்லமான டச்ஷன்ட் நாய்களுக்கு அருங்காட்சியகம்: எங்கு தெரியுமா?

Report Print Gokulan Gokulan in ஐரோப்பா
33Shares
33Shares
lankasrimarket.com

பாசோ நகரில் புகழ் பெற்ற ஜெர்மன் டச்ஷண்ட் நாய்களுக்கான அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.

ஜெர்மனின் தென்கிழக்கு நாடுகளில் ஒன்றான பவேரியா டச்ஷண்ட் நாய்களின் மீதான உலகளாவிய பாசத்தைக் கொண்டாடும் வகையில் இந்த வகை நாய்களுக்காக மட்டுமே ஒரு அருங்காட்சியகத்தைத் தொடங்கி உள்ளது.

இதில் 4500க்கும் மேற்பட்ட பொம்மைகளும் "sausage dogs" என்று செல்லமாக அழைக்கப்படும் பவேரியாவின் சின்னமான டச்ஷண்ட் நாய்களை நினைவூட்டும் பொருட்களும் உள்ளன.

வால்டி என்ற டச்ஷண்ட் நாய் 1972 ம் ஆண்டு மியூனிக் ஒலிம்பிக்கின் சின்னமாகவே இருந்தது என்றால் இதன் மீதான உலகின் பிரியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

உலகின் மிகப்பெரிய டச்ஷண்ட் நாய்களின் தொகுப்பான இந்த அருங்காட்சியம் இரண்டு பூ வியாபாரிகளின் முயற்சியால் பாசோ நகரின் மத்தியில் உள்ள Residenzplatzல் திங்களன்று திறக்கப்பட்டுள்ளது.

தங்களது 25 ஆண்டு கால டச்ஷண்ட் நாய்கள் பற்றிய சேகரிப்புகளே இதை ஆரம்பிக்க உதவியாய் இருந்ததாக இவர்கள் கூறினர்.

கலைஞர் பாப்லோ பிக்காசோ மற்றும் இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்கள் டச்ஷண்டின் ரசிகர்களில் ஒருவர் என்பது மிகப் பெருமைக்குரிய விஷயமாக இவர்கள் பார்க்கிறார்கள்.

இது குறித்து Seppi Küblbeckன் இணை இயக்குனர் கூறுகையில், "sausage dogs"ன் அருங்காட்சியகம் இந்த உலகிற்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது உலகில் வேறு எந்த ஒரு நாய் இனத்திற்கும் கிடைத்திடாத பெருமையும் பாராட்டும் பவேரியா நாட்டின் சின்னமான இந்த டச்ஷண்ட் இனத்திற்கு கிடைத்திருக்கிறது என்று கூறினார்.

டச்ஷண்ட் நாய்களின் உருவம் பதித்த அழகிய வேலைப்பாடுகள், ஸ்டாம்புகள் , மற்றும் பீங்கான் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய காலங்களில் ஜெர்மானியர்கள் நரிகளிடமிருந்தும் பாம்புகளிடமிருந்தும் தங்களது வாத்து கோழிகளைக் காப்பாற்றுவதற்காக வளர்த்து வந்த இந்த டச்ஷண்ட் இனம் வேட்டையாடுவதில் சிறப்புத் திறன் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்