பிரெக்சிட்டுக்குப்பின் எதுவும் மோசமாக நடக்காது, இது தேவையற்ற பயம்: பிரெஞ்சு மூத்த அதிகாரி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெக்சிட்டுக்குப்பின் எதுவும் மோசமாக நடக்காது என்று கூறியுள்ள மூத்த பிரெஞ்சு அதிகாரி ஒருவர், தற்போது பிரெக்சிட் குறித்து நிலவும் இந்த பயம் தேவையற்றது என்று கூறியுள்ளார்.

பிரெக்சிட்டுக்குப்பின் கலாயிஸ் துறைமுகத்தில் வாகனங்கள் வரிசையாக நிற்க வேண்டிய சூழல் ஏற்படும், போக்குவரத்து நெரிசலும் அதனால் கடுமையான கால தாமதமும் ஏற்படும் என்ற ஒரு அச்சம் நிலவி வருவதை மறுக்க இயலாது.

கலாயிஸ் துறைமுகத்தின் தலைவரான Jean-Marc Puissesseau, பிரெக்சிட்டுக்குப்பின் என்ன நிகழும் என்பதைக் குறித்த அச்சம் தேவையில்லை, பெரிதாக ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை, பிரித்தானியாவும் ஒரு மூன்றாம் நாடாகிவிடும் அவ்வளவுதான் என்கிறார் .

இரண்டு நாடுகளும் அதற்கேற்ற ஆயத்தங்களைச் செய்தால் போதும், போக்குவரத்து சுமூகமாக நிகழும் என்கிறார் Puissesseau.

பிரித்தானியா வெளியேறுவது மார்ச் மாதத்தில் நிகழ்ந்திருக்கும் என்றால் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் தற்போது ஏழு மாதங்கள் நேரம் இருக்கிறது, இரண்டு நாடுகளும் பிரெக்சிட்டுக்காக ஆயத்தமாகலாம் என்கிறார் Puissesseau.

மேலும், தேவையில்லாமல் பிரித்தானியாவிலுள்ள சில குறிப்பிட்ட நபர்கள்தான் இந்த விடயத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்கிறார் அவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers