30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்!

Report Print Jayapradha in ஆரோக்கியம்

வெங்காயத்தை குறிப்பாக உடல் எடையை குறைக்க பயன்படுத்தலாம் என உடல்நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில் அதில் உள்ள நீர்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், சல்பர் போலேட், வைட்டமின் பி9, வைட்டமின் பி6 போன்றவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

மேலும் வெங்காயத்தைக் கொண்டு உடல் எடையை எவ்வாறு குறைக்க முடியும் என்பதை பற்றி தெரிந்து கொண்டு நிங்களும் இந்த முறையை பின்பற்றி பயன் அடையுங்கள்.

உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
வெங்காய சாறு
 • வெங்காயத்தை நன்றாக நறுக்கி அதனை ஒரு பாத்திரத்தில் நீர் சேர்த்து கொண்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு இந்த நீரை வடிகட்டி தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
 • மேலும் வெங்காய சாறு தொடர்ந்து குடித்து வந்தாலே உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து நீங்கள் கச்சிதமான உடல் எடையை பெற்று விடுவீர்கள்.
வெங்காயம் மற்றும் மாதுளை
 • வெங்காயம் மற்றும் மாதுளை இவை இரண்டும் உடல் எடையை குறைக்க சிறந்த மருந்தாக உள்ளது.
 • ஒரு பாத்திரத்தில் மாதுளை சாறு, உப்பு, மிளகு, பார்ஸ்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொண்டு பின் அதனுள் நன்கு வதக்கிய வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவாக குறையும்.
வெங்காயம் மற்றும் எலுமிச்சை
 • வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி பிறகு இதனுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதில் சிறிது உப்பை சேர்த்து கலந்து கொண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை விரைவில் குறைத்து விடலாம்.
நன்மைகள்
 • வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
 • வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால் புற்றுநோய் செல்களை அழிக்கும். மேலும், இது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் இல்லாமல் நம்மை காக்கும்.
 • வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
 • வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும். மேலும் தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.
 • முடி உதிர்வு, பொடுகு தொல்லை, பேன் பிரச்சினை போன்றவற்றிற்கு வெங்காயம் முற்றிபுள்ளி வைக்கிறது.
 • வெங்காயத்தில் S-methylcysteine என்ற முக்கிய மூல பொருள் இதில் உள்ளதால் சர்க்கரையின் அளவை ரத்தத்தில் அதிகரிக்காமல் பார்த்து கொள்ளும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்