முதலில் கருச்சிதைவு..அடுத்து கணவரின் திடீர் மரணம்! துடிதுடித்து போன இளம் மனைவி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் நக்சல் தீவிரவாதிகளால் தொலைக்காட்சி கமெராமேன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அச்சுதானந்த் என்பவர் தூர்தஷன் தொலைக்காட்சி நிறுவனத்தின் கமெராமேனாக பணிபுரிந்து வந்தனர்.

இவருக்கு ஹிமச்சாலி சஹு என்ற பெண்ணுடன் கடந்த 2016-ல் திருமணம் நடந்தது.

இந்நிலையில் சதிஸ்கர் மாநிலத்துக்கு அச்சுதானந்த் சென்றுள்ளார்.

அங்கு நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அச்சுதானந்த் உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.

கணவர் இறந்த விடயத்தை தொலைக்காட்சி செய்தியை பார்த்த போது அறிந்த ஹிமாச்சாலி துடித்து போனார்.

இது குறித்து தம்பதியின் உறவினர் ஒருவர் கூறுகையில், அச்சுதானந்தும், ஹிமாச்சாலியும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.

ஒரு ஆண்டுக்கு முன்னர் கர்ப்பமான ஹிமாச்சாலிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இதனால் அவர் மனமுடைந்தார்.

தற்போது கணவரையும் இழந்தது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அச்சுதானந்த் இறந்துபோனதை எங்களால் நம்ப முடியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்