2வது முறையாக தந்தையான சுரேஷ் ரெய்னா

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்காவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா திங்கள்கிழமையன்று (மார்ச் 22) ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதன்மூலம் இரண்டாவது முறையாக ரெய்னா தந்தையாகியுள்ளார்.

இதற்கு முன்பாக 32 வயதான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரருக்கு 2016-ல் கிரேசியா என்கிற ஒரு மகள் பிறந்திருந்தார்.

முன்னதாக இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக அறியப்பட்ட சுரேஷ் ரெய்னா, கடைசியாக 17 ஜூலை 2018 அன்று லீட்ஸ் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டிக்கு பின்னர் எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மொத்தமாக 226 ஒருநாள், 78 டி 20 மற்றும் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...