இதுவரை யாரும் பார்த்திராத பிஞ்சுக்குழந்தை மேகனின் புகைப்படங்கள் வெளியீடு!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் பிஞ்சுக்குழந்தையாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவருடைய மாமா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய இளவரசி மேகன் ஆகஸ்டு 4, 1981 இல் பிறந்த பிறகு, அவர் தனது மணிக்கட்டு மற்றும் கணுக்கால் சுற்றிலும் அடையாள குறிச்சொற்களை அணிந்துள்ளார்.

அவரை கையில் பிடித்தவாறே 24 வயதான தாய் டோரியா மார்க்கெல் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.

ஒரு கடுமையான லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனை அறையில் ஒரு குடும்ப உறுப்பினரால் கைப்பற்றப்பட்ட இந்த அதிசயமான புகைப்படம் தான் எதிர்கால பிரித்தானிய இளவரசியின் முதல் புகைப்படமாகும்.

இதுவரை வெளியிடப்படாத 30க்கும் மேற்பட்ட புகைப்படங்களை மேகனின் மாமா ஜோசப் ஜான்சன் (69), தற்போது டெய்லி மெயில் தளத்திற்கு கொடுத்துள்ளார்.

இன்னும் சில வாரங்களில் மேகன் தன்னுடைய முதல் குழந்தையை பெற்றெடுக்கவிருக்கும் நிலையில், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சொந்த காரணங்களுக்கு குடும்பத்தில் உள்ள அவருடைய அப்பா உட்பட அனைவருடனும் மேகன் பேசாமல் இருப்பது போலவே ஜான்சனுடன் கூட தொடர்பில் இல்லாமல் இருக்கிறார். பிறக்கவிருக்கும் புதிய குழந்தை தான், அனைவரையும் சேர்த்து வைக்கும் என்று தான் நம்புவதாக ஜான்சன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்