என்ன செய்தார் என்பது அவருக்கே தெரியும்... இளவரசர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பேட்டி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ என்ன செய்தார் என்பது அவருக்கே தெரியும் என, பாலியல் குற்றம் சுமத்திய வர்ஜீனியா ராபர்ட்ஸ் இன்று நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்,.

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவுடன் பாலியல் மோதலுக்கு தள்ளப்பட்டதாகக் கூறி, தற்கொலை செய்துகொண்ட பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நெருங்கிய நண்பரான மேக்ஸ்வெல் மீது வர்ஜீனியா ராபர்ட்ஸ் என்கிற பெண் 2015 இல் வழக்குத் தொடர்ந்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இளவரசரும், அரண்மனை நிர்வாகமும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் எப்ஸ்டீனின் குற்றவியல் மனித கடத்தல் வழக்கைக் கையாண்டு வரும் நீதிபதி ரிச்சர்ட் பெர்மனால், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களை நீதிமன்றத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு நடந்த கொடூரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த வர்ஜீனியா ராபர்ட்ஸ், இளவரசர் ஆண்ட்ரூ என்ன செய்தார் என்பது அவருக்குத் தெரியும், அவர் அதைப் பற்றி தெளிவாக வருவார் என்று நம்புகிறேன்' எனத்தெரிவித்துள்ளார்.

எப்ஸ்டீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளால் இளவரசர் திகைத்துப்போனதாகவும், எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து அறிக்கைகள் வெளிவந்த பின்னரே வர்ஜீனியா ராபர்ட்ஸ் இப்படி பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்