அரசாங்கத்தை ஏமாற்றி 260,000 பவுண்டுகள் மோசடி செய்த பெண்... காட்டி கொடுத்த வீடியோ காட்சி

Report Print Vijay Amburore in பிரித்தானியா
1760Shares

பிரித்தானிய அரசை ஏமாற்றி 260,000 பவுண்டுகள் மோசடி செய்த பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த நஸ்ரின் அக்தர் என்கிற பெண், உடல்நிலை சரியில்லாமல் உதவி செய்வதற்கு கூட ஆள் இல்லாமல் வீட்டில் தனிமையில் இருப்பதாக கூறி கடந்த 2002 முதல் 2013க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் வேலை மற்றும் ஓய்வூதியத் துறையிலிருந்து 260,000 பவுண்டுகள் பணம் பெற்றுள்ளார்.

இதனையடுத்து ஒருநாள் அதிகாரிகள் அவருடைய வீட்டிற்கு சோதனை மேற்கொள்வதற்காக சென்றுள்ளனர். தான் ஒரு ஊனம் வீட்டில் தான் எப்பொழுதுமே இருப்பேன் எனக்கூறிய அந்த பெண், அன்றைய தினம் அவருடைய வீட்டில் இல்லை.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை ரகசிய கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தனர். அப்பொழுது அந்த பெண்ணுக்கு காதலன் இருப்பதும், அவர் ஊனம் இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அவர் நீதிமன்ற வழக்கிலிருந்து தப்ப முயன்றார்.

மூன்று வருட தீவிர விசாரணைக்கு பின், திருமண நிகழ்வு ஒன்றில் அவர் உறவினர்களுடன் நடனமாடும் வீடியோ காட்சி ஒன்றினை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 50 வயதான நஸ்ரின், ஏழு மோசடிகளை ஒப்புக் கொண்டார், இதனையடுத்து மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்