பிரித்தானிய பொதுத்தேர்தல்: தேர்தலுக்கு முந்தைய சமீபத்திய கருத்துக்கணிப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், பிரபல பிரித்தானிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுளது.

Evening Standard என்னும் அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த கருத்துக் கணிப்பின்படி கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கு 11 புள்ளிகள் முன்னிலை கிடைக்கும், அதே நேரத்தில், லேபர் கட்சியும் முன்னேறி வருவதை மறுக்க முடியாது.

வாக்காளர்களில் கிட்டத்தட்ட கால்வாசிப்பேர் இன்னமும் மதில் மேல் பூனையாகத்தான் உள்ளனர்.

யாருக்கு வாக்களிப்பது என அவர்கள் உறுதியாக முடிவு செய்யவில்லை. லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியினரிடையே இந்த தடுமாற்றம் அதிக அளவில் காணப்படுகிறது.

ஜெரமி கார்பினுக்கு 18 முதல் 34 வயதுள்ளவர்களிடம் அதிக வரவேற்பு உள்ளதால் அவரது வாக்குகள் கணிசமாக அதிகரிக்கும் என்று தெரிகிறது.

யார் தகுதியான பிரதமர் என்ற விடயத்தில் ஜான்சன், ஜெரமி கார்பினை முந்துகிறார் என்றாலும், மொத்தத்தில் இருவருக்குமே ஆதரவு குறைந்துள்ளது.

டிசம்பர் 9 முதல் 11 வரை பிரித்தானியா முழுவதிலும் உள்ள 2213 வயது வந்தவர்களிடம் தொலைபேசி மூலம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்