பாலின சமத்துவமின்மைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமாயின் எதிர்வரும் 2026ஆம் ஆண்டளவில் கனடாவின் பொருளாதாரம் 150 பில்லியன் அமெரிக்க டொலர்வரை உயரும் என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறாக பாலின இடைவெளி நீக்கப்படுமாயின் நாட்டின் பொருளாதாரம் 420 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த இடைவெளி நிவர்த்திக்கப்படின் நாட்டின் வருடாந்த உள்நாட்டு உற்பத்தி 0.6 சதவீதத்தினால் அதிகரிப்பை பிரதிபலிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களில் 53 வீதமானவர்கள் பட்டம் பெற்றவர்களாக காணப்படுகின்ற போதிலும், அவர்களில் 40 வீதமானோர் மாத்திரமே உயர் பதவிகளில் காணப்படுகின்றனர்.