கனடா நாட்டின் உயரிய பதவிக்கு மீண்டும் ஒரு இந்தியர் நியமனம்

Report Print Arbin Arbin in கனடா
178Shares
178Shares
lankasrimarket.com

கனடா நாட்டின் தூதரக அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபரான ரானா சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடா நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் ரானா சர்க்கார். இவர் கடந்த 2009-2013 ஆம் ஆண்டுவரை கனடா-இந்தியா வணிக கவுன்சிலின் தலைவராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், ரானா சர்க்காரை கனடா நாட்டின் தூதரக தலைமை அதிகாரியாக அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.

மேலும் வருகிற 16 ஆம் திகதி தொடங்க உள்ள மெக்சிகோ மற்றும் அமெரிக்கா உடனான வர்த்தக உடன்படிக்கை மறுபரிசீலனையில் கலந்து கொள்ளும் 13 பேர் கொண்ட குழு உறுப்பினராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரை இந்த பதவியில் நியமித்ததன் மூலம் கனடா நாட்டிற்கு அதிக அளவிலான முதலீட்டை அவர் கொண்டு வருவார் என நம்புவதாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரானா சர்க்காருடன் ஏற்கெனவே மேலும் நான்கு இந்திய வம்சாவளியினர் கனடா நாட்டின் மந்திரிகளாக பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள், பர்திஷ் சகார் - சிறுதொழில் மற்றும் சுற்றுலாத்துறை, நவ்தீப் பெய்ன்ஸ் - அறிவியல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறை, ஹர்ஜித் சிங் சஜ்ஜன் - தேசிய பாதுகாப்புத்துறை, அமர்ஜீத் சோகி - உள்கட்டமைப்பு மற்றும் சமூகங்கள் துறை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்